ஜெய்ப்பூரில் உள்ள நீர்ஜா மோடி பள்ளியில் 9 வயது மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. இதுகுறித்து சிபிஎஸ்இ (CBSE) விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விசாரணையில், பள்ளியின் பாதுகாப்பு விதிமுறைகளில் பெரும் அலட்சியம் இருந்தது தெரியவந்துள்ளது.. மேலும் இந்த சம்பவத்துக்கான உடனடி நடவடிக்கைகளிலும் கடுமையான குறைபாடுகள் இருந்தது என்பது கண்டறியப்பட்டுள்ளது..
உயிரிழந்த மாணவி தொடர்ந்து சக மாணவர்களின் கடுமையான துன்புறுத்தலுக்கு ஆளாகி வந்ததாக சிபிஎஸ்இ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. அசிங்கமான வார்த்தை மூலம் வாய்வழி அவமதிப்புகள் ஆகியவை இருந்தன.
அதே நாளில் மாணவி இரண்டு முறை தனது வகுப்பு ஆசிரியைிடம் புகார் செய்திருந்தாலும், அவரை ஒருமுறையும் பள்ளி உளவியல் ஆலோசகரிடம் அழைத்துச் செல்லவில்லை என்று விசாரணையில் தெரியவந்துள்ளது..
சம்பவம் எப்படி நடந்தது?
நவம்பர் 1 அன்று, 4ஆம் வகுப்பு மாணவியான அமைரா குமார் மீனா, பள்ளி கட்டிடத்தின் நான்காவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். தங்கள் மகள் தொடர்ந்து புல்லிங்கிற்கு ஆளானதாகவும், மாணவர்கள் அவளை தொந்தரவு செய்து அவமதித்ததாகவும் அவரின் பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர். இதை பள்ளி நிர்வாகம் கவனிக்காமல் விட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்..
பள்ளியின் பொறுப்பில்லா நடத்தை
பள்ளி பல முக்கிய எச்சரிக்கைகளைக் கவனிக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.. மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் உணர்ச்சி நலனுக்கான சரியான அமைப்புகள் இல்லை, குழந்தை பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று சிபிஎஸ்இ கண்டறிந்துள்ளது.
“கடுமையான விதிமுறை மீறல்கள், மாணவி மீது நீண்டகால துன்புறுத்தல் ஆகிய காரணங்களுக்காக பள்ளி மேலாளருக்கு சிபிஎஸ்இ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 30 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.



