தமிழ்நாட்டையே உலுக்கிய மாணவி கொலை.. குற்றவாளி கைது..!

vilathikulam student rape

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர் கடந்த 11-ம் தேதி மாலை 6 மணிக்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டிலிருந்து அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றார்..


வெகு நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால், சிறுமியின் தந்தை சுப்புராஜ் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த புதன்கிழமை புகார் அளித்தார்..

போலீசார் மாணவியை தேடி வந்த நிலையில், 12-ம் தேதி மாலையில் புதன்கிழமை மாலையில் வேடநத்தம் காட்டுப்பகுதியில் முகம், உடலில் காயங்களுடன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் மாணவியின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற போலிசார் மாணவியின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. இதுதொடர்பாக விளாத்திக்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

குற்றவாளியை கைது செய்யும் வரை மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறி உறவினர்களும் கிராம மக்களும் போராட்டம் நடத்தினர்.. அதன்படி கடந்த 9 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.. குற்றவாளியை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது..

இந்த நிலையில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சாயல்குடியை சேர்ந்த முனீஸ்வரன் என்ற 30 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.. செல்போன் சிக்னலை வைத்து ஆய்வு செய்த போது அதன் அடிப்படையில் முனீஸ்வரன் என்ற நபர் கைது செய்யப்பட்டார். தனிப்படை போலீசாரால் கைது செய்யபப்ட்ட முனீஸ்வரன் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Read More : ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டிற்கு 5 தலைநகரங்கள்.. அன்பான சர்வாதிகார ஆட்சி.. நாதகவின் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் சீமான்..!

RUPA

Next Post

மனைவி எவ்வளவு தொகை கேட்டாலும், கணவன் ஜீவனாம்சம் வழங்க வேண்டுமா..? ஆண்கள் தெரிஞ்சுக்க வேண்டிய உண்மைகள்..!

Thu Mar 19 , 2026
விவாகரத்தின் போது மனைவி கோரும் பராமரிப்புத் தொகையை கணவர் வழங்க வேண்டுமா? நீதிமன்றம் உண்மையில் எந்த அடிப்படையில் பராமரிப்புத் தொகையைத் தீர்மானிக்கிறது? கணவரின் சொத்துக்களில் பாதியை மனைவி பெற முடியுமா? இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.. விவாகரத்து நடைமுறைகளில் பராமரிப்புத் தொகை என்பது அதிகம் விவாதிக்கப்படும் ஒரு விஷயமாகும். மனைவி கோரினால் கணவர் அதை வழங்க வேண்டுமா? கணவரின் சொத்துக்களில் பாதியை மனைவி பெற முடியுமா? இந்த விவகாரங்கள் குறித்த சட்டரீதியான […]
Husband wife divorce

You May Like