நண்பனின் பிறந்தநாள் பார்டிக்கு வந்த மாணவி..!! வாட்ஸ் அப்பில் உல்லாச வீடியோ..!! நிர்வாணமாக கிடந்த உடல்..!! போலீசுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!

Rape 2025

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், உயர்கல்வி பயின்று வந்த 24 வயது எம்பிஏ (MBA) மாணவி குஷ்பு ராத்தோர், மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, தனது கல்லூரி நண்பன் பியூஷ் தனோதியாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காகச் சென்ற குஷ்பு, அதன்பின் மாயமானார். மகளைக் காணாமல் தவித்த பெற்றோர் தேடி வந்த நிலையில், 3 நாட்களுக்குப் பிறகு ஒரு வாடகை வீட்டில் இருந்து அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


இந்தூரின் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பியூஷின் வாடகை வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்குப் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது அதிர்ச்சியில் உறைந்தனர். அங்கு மாணவி குஷ்புவின் உடல் நிர்வாணமாகவும், உடல் அழுகிச் சிதைந்த நிலையிலும் கண்டெடுக்கப்பட்டது. மாணவியின் கழுத்தில் கயிறு இறுக்கப்பட்டதற்கான ஆழமான தடயங்கள் இருப்பதால், அவர் கழுத்தை நெரித்து மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்தக் கொலை வழக்கின் பின்னணியில் ஆபாச வீடியோ விவகாரம் ஒன்று விஸ்வரூபம் எடுத்துள்ளது. குஷ்பு கொலை செய்யப்பட்ட நேரத்தில், அவரது கல்லூரி வாட்ஸ்அப் குழுவில் அவர் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோ ஒன்று பதிவேற்றப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் இருந்த நபரின் முகம் எமோஜிகளால் மறைக்கப்பட்டிருந்தாலும், அந்த நபர் பியூஷாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த வீடியோவை காட்டி மாணவியை மிரட்டியபோது, ஏற்பட்ட மோதலில் இந்தக் கொலை நடந்ததா அல்லது திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த நாள் முதல் பியூஷ் தனோதியா தலைமறைவாக உள்ளார். தனது பிறந்தநாள் அன்றே சக தோழியை தனது வீட்டிற்கு வரவழைத்து இத்தகைய கொடூரத்தை செய்திருப்பது சக மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனிப்படை அமைத்து தேடி வரும் போலீசார், மொபைல் சிக்னல்களை கொண்டு பியூஷை நெருங்க முயன்று வருகின்றனர்.

Read More : சம்மர் நெருங்குது..!! ஏசி முதல் பிரிட்ஜ் வரை..!! எந்த சாதனத்தை எப்போது சர்வீஸ் செய்ய வேண்டும்..? முழு விவரம் உள்ளே..!!

CHELLA

Next Post

வடகிழக்கு மாநிலங்களை 'அஷ்டலட்சுமி தேவி' என்று பாராட்டிய பிரதமர் மோடி..! அசாமை புறக்கணித்த காங்கிரஸை சாடல்!

Sat Feb 14 , 2026
கவுகாத்தியில் நடைபெற்ற ஒரு பிரமாண்டமான பேரணியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சித்தார்.. அப்போது புறக்கணிக்கப்பட்ட வடகிழக்கு பகுதியை தனது அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமையாக அறிவித்தார்.. பிரதமர் மோடி, அசாம் மாநிலத்தை ‘அஷ்டலட்சுமி’யுடன் ஒப்பிட்டார். அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உட்பட ஆயிரக்கணக்கான உற்சாகமான பாரதிய ஜனதா கட்சி (BJP) தொழிலாளர்கள் மற்றும் ஆதரவாளர்களை உரையாற்றிய பிரதமர் மோடி, பாஜக-தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) […]
modi nn

You May Like