அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நடப்பாண்டு மார்ச் மாதம் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி, விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள், தங்களது விடைத்தாள் நகலை இன்று (ஜூன் 10) முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட இணையதளத்தில் நோடிபிகேசன் பகுதியில் ‘எச்.எஸ்.இ. முதலாம் ஆண்டு தேர்வு, மார்ச் 2025 – ஸ்கிரிப்ட்ஸ் டவுன்லோடு’ என்பதை கிளிக் செய்து, அதில் காண்பிக்கப்படும் பக்கத்தில் தேர்வெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் அதே இணையதளத்தில் வெற்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். பின்னர், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இன்று முதல் 13ஆம் தேதி வரை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுமதிப்பீட்டுக்கு பாடம் ஒன்றுக்கு ரூ.505 கட்டணம் செலுத்த வேண்டும். அதேபோல், மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்திற்கு 305 ரூபாயும், மற்ற பாடங்களுக்கு தலா 205 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தை மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் பணமாக செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : விவசாயிகளே..!! கூட்டுறவுத்துறையில் பயிர்க் கடன் வாங்க போறீங்களா..? அப்படினா இதை கண்டிப்பா படிங்க..!!