திண்டுக்கல் மாவட்ட அரசியல் களத்தில் ஆளுங்கட்சியான திமுக தனது செல்வாக்கை மேலும் வலுப்படுத்தும் விதமாக, மேட்டுப்பட்டி பகுதியில் ஒரு பிரம்மாண்ட அரசியல் இணைப்பு விழாவை முன்னெடுத்துள்ளது. நேற்று நடைபெற்ற இந்த உற்சாகமான நிகழ்வில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகிய 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்களும், பெண்களும் திமுகவின் அடிப்படை உறுப்பினர்களாகப் பதிவு செய்துகொண்டனர். தமிழக வெற்றிக் கழகம் போன்ற புதிய கட்சிகளில் இணைந்திருந்த இளைஞர்கள், குறுகிய காலத்திலேயே அங்கிருந்து விலகி திமுகவை நோக்கி அணிவகுப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி நேரடியாக கட்சி துண்டுகளை அணிவித்து, அவர்களை உற்சாகமாக வரவேற்றார்.
Read More : சென்னையில் பயங்கரம்..!! அரசு மருத்துவமனை வளாகத்தில் பிரபல ரவுடி வெட்டிப் படுகொலை..!! பதறிப்போன நோயாளிகள்..!!



