யுனைட்டெட் ஏர்லைன்ஸின் UA108 என்ற பயணிகள் விமானம், அமெரிக்காவின் வாஷிங்டன் டுல்ஸ் (Dulles) விமான நிலையத்திலிருந்து ஜெர்மனியின் மியூனிக் நகரம் நோக்கி புறப்பட்டது.. ஆனால் இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இடது எஞ்சினில் செயலிழப்பு ஏற்பட்டதையடுத்து, Mayday அவசர அழைப்பு விடுத்து விமானம் மீண்டும் வாஷிங்டனுக்கு அவசரமாக திரும்பியது.
என்ன நடந்தது?
2025-ம் ஆண்டு ஜூலை 25-ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தில், Boeing 787 Dreamliner வகையைச் சேர்ந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, விமானத்திலுள்ள இடது எஞ்சின் திடீரென செயலிழந்தது. இதன் காரணமாக, விமானத்தை இயக்கிய விமானிகள் வானளாவிய பாதுகாப்பு வழிமுறைக்கு இணங்க, Mayday அழைப்பு விடுத்து விமான திசையை திருப்பி மீண்டும் டுல்ஸ் விமான நிலையத்துக்குத் திரும்பினர்.
எரிபொருள் வெளியேற்றம்
விமானம் மிகுந்த எரிபொருளுடன் புறப்பட்டிருந்ததால், அவசர தரையிறக்கம் செய்யும் முன் விமானத்தின் எடையை குறைப்பதற்காக, அது வானத்தில் சில சுற்றுகளைச் சுழன்று எரிபொருளை வெளியேற்றியது (fuel dumping). பின்னர், விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.
பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ஆனால், எஞ்சின் கோளாறால் விமானம் ரன்வேயில் இயங்க முடியாமல் போனதால், அது “tow” வாகனத்தின் உதவியுடன் அகற்றப்பட்டது.
இந்தியாவின் அகமதாபாத்தில் சமீபத்தில் நடந்த ஏர் இந்தியா சம்பவத்தை போலவே இந்த Mayday அவசரநிலை கவனத்தை ஈர்த்துள்ளது. அகமதாபாத்திலும் போயிங் 787-8 விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கடுமையான இயந்திர செயலிழப்பை சந்தித்தது. அப்போது விமானிகள் Mayday அவசர அழைப்பு விடுத்தனர்.. எனினும் அதற்குள்ளாகவே விமான கல்லூரி விடுதிக் கட்டிடத்தின் மோதி விபத்துள்ளானது.. நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த ஒருவரை தவிர 241 பேரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..