நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், ஊட்டி, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த வாரம் கனமழை கொட்டி தீர்த்தது.. இதையடுத்து பல இடங்கள், மரங்கள் மண் சரிவு ஏற்பட்டது.. நிலச்சரிவுகள் காரணமாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது… இதையடுத்து பாதுகாப்பு கருதி பொதுமக்கள் அந்த பகுதிகளில் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.. இதையடுத்து சீரமைப்பு பணியில் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது.. இதை தொடர்ந்து மழை குறைந்த நிலையில் இயல்பு நிலை திரும்பியது..
இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஒதனட்டி என்ற பகுதியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.. கட்டிட வேலைக்காக பள்ளம் தோண்டும் பணியின் போது திடீரென மண் சரிவு ஏற்பட்டதில் வட மாநில தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர்.. மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.. அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.. இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் மேற்கு வங்கத்தை சேர்ந்த அப்துல் ரகுமான், நசீர் உசேன், உஸ்மான் ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.. மண் சரிவில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Read More : ஏற்கனவே அறிவித்த ரூ.60,000 எப்ப வரும்? மீண்டும் யாரை ஏமாத்த போறீங்க..? CM ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி..!



