தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன..
திமுக கூட்டணியில் இதுவரை காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், மதிமுகவுக்கு 4 தொகுதிகளும், கொமதேக கட்சிக்கு 2 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும் திமுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உடன் தொகுதி பங்கீட்டில் இழுபறி தொடர்ந்து வருகிறது.. திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தொகுதி பங்கீட்டில் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை..
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு கூட்டம் சற்று நேரத்தில் கூடுகிறது.. 5 தொகுதிகளை ஏற்கக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த நிர்வாகிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.. கடந்த முறை பெற்ற 6 தொகுதிகளையாவது கொடுக்க வேண்டும்.. 6 தொகுதிகள் என்றால், பேச்சுவார்த்தைக்கு வருகிறோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிடிவாதம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.. கூட்டணியில் அடுத்தக்கட்டம் குறித்து இன்றைய செயற்குழுவில் விவாதிக்க உள்ளது.. திமுக கூட்டணியில் தொடரலாமா அல்லது வெளியேறுவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது..



