திடீர் ட்விஸ்ட்..! ஹைதரபாத்தில் ராகுல் காந்தி – ஆதவ் அர்ஜுனா ரகசிய சந்திப்பு..? கூட்டணியில் இருந்து வெளியேறும் காங்கிரஸ்..?

stalin rahul vijay 1

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன..


திமுக கூட்டணியில் புதிதாக தேமுதிக இணைந்துள்ளது. எனினும் திமுக கூட்டணியில் கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளை விட கூடுதல் தொகுதிகள் வேண்டும் எனவும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் எனவும் காங்கிரஸ் கூறி வருகிறது.. இதனால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடருமா என்பதில் குழப்பம் நீடிக்கிறது..

எனினும் தமிழகத்தை பொறுத்தவரை ஆட்சியில் பங்கு என்பதெல்லாம் ஒத்துவராது என்பதை ஸ்டாலின் வெளிப்படையாக கூறிவிட்டார்.. ஆனாலும் திமுகவை சீண்டும் வகையில் மாணிக்கம் தாகூர் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.. சமீபத்தில் காங்கிரஸின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் தவெக காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளதாகவும், தவெக உடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருதாகவும் கூறி பரபரப்பை கிளப்பினார்..

திமுக – காங்கரஸ் இடையேயான உறவில் விரிசல் அதிகரித்ததால், கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா என்ற குழப்பம் நீடித்தது.. கடந்த சனிக்கிழமை திமுகவுடன் காங்கிரஸ் நடத்திய முதல்கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடைந்தது.. இந்த பேச்சுவார்த்தை சுமூகமாகவும் வெற்றிகரமாகவும் நடந்ததாகவும் செல்வப் பெருந்தகை தெரிவித்திருந்தார்..

இந்த நிலையில் தவெக உடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. ராகுல்காந்தி தற்போது தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவும் அங்கு சென்றுள்ளார்.. ஹைதராபாத்தில் ராகுல் காந்தியும் ஆதவ் அர்ஜுனாவும் ரகசிய சந்திப்பு நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.. தவெக உடன் கூட்டணி அமைப்பது குறித்து கே.சி வேணுகோபால் எம்.எல்.ஏக்களிடம் கேட்டறிந்ததாகவும் தகவல்கள் தெரிவிகின்றன. எனினும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பலரும் திமுக உடனே கூட்டணியை தொடரலாம் என்றும், தவெக உடன் கூட்டணி வைத்தால் வெற்றி வாய்ப்பு குறைவும் என்றும் கூறினார்களாம்.. மேலும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி அங்கீகாரத்தையே இழக்கக் கூடும் என்றும் அவர்கள் வேணுகோபாலிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது..

தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா ஹைதராபாத் சென்ற நிலையில் தமிழக காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரும் சென்றதாகவும் கூறப்படுகிறது.. இந்த சூழலில் இன்று மாலைக்குள் உறுதியான தகவலை அளிக்க காங்கிரஸ் கட்சிக்கு திமுக கெடு விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது..

எனினும் கூட்டணி தொடர்பாக தவெக உடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பேசவில்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.. தமிழக வெற்றிக் கழகத்துடன் பேசுமாறு தலைமையிடம் இருந்து எந்த உத்தரவும் எனக்கு வரவில்லை எனவும் தெரிவித்துள்ளார்..

தேர்தல் கூட்டணி தொடர்பாக திரைமறைவில் எந்தவொரு அரசியலும் நடைபெறவில்லை எனவும் செல்வப்பெருந்தகை விளக்கம் அளித்துள்ளார்.. பேச்சுவார்த்தையில் கூடுதல் இடங்கள் கேட்பது வழக்கமானது தான், எனவே கூடுதல் இடம் கேட்டுள்ளோம்..” என்று தெரிவித்துள்ளார்..

Read More : “விசிக பேரம் பேசும் கட்சி இல்லை.. ஆட்சியில் பங்கு.. எங்கள் நிலைப்பாடு இது தான்..” திருமாவளவன் பரபரப்பு பேட்டி..

RUPA

Next Post

ஈரானில் இதுவரை 555 பேர் பலி..! குவைத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானங்கள்..! மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம்..!

Mon Mar 2 , 2026
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் முழுவதும் பரவலான தாக்குதல்களை நடத்தியது… ஈரானின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தளங்கள் குறிவைக்கப்பட்டதுடன், பல போர்க்கப்பல்கள் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டதற்குப் பிறகு, இந்த இராணுவ நடவடிக்கைகள் மேலும் தீவிரமடைந்துள்ளன. இந்த தாக்குதல்களால் நாடு முழுவதும் பல இடங்களில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும், தலைநகர் தெஹ்ரான் நகரின் மேல் புகை மேகங்கள் எழுந்ததாகவும் தகவல்கள் […]
17723811691012793 india us israel iran protest 60259 1

You May Like