அதிமுகவில் சசிகலாவின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் புகழேந்தி. சசிகலா சிறை சென்ற பின் டிடிவி அணிக்கு சென்ரார்.. பின்னர் டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட கருத்த வேறுபாட்டால் அதிலிருந்து விலகி ஓபிஎஸ் அணியில் இணைந்தார்.
சமீபத்தில் ஓபிஎஸ் திமுகவில் இணைந்ததை விமர்சித்த புகழேந்தி புரட்சி அண்னா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார்.. இந்த நிலையில் புகழேந்தி இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்..
இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் “ முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பான ஆட்சியை வழங்கி வருகிறார்.. எங்கள் புதிய கட்சி இந்த தேர்தலில் திமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்யும்.. மதவாத சக்திகள் தமிழ்நாட்டிற்கு வரக்கூடாது என்றால் அதற்கு ஸ்டாலின் தலைமை தான் சரியாக இருக்கும்.. இந்த தேர்தல் தமிழ்நாடு முழுவதும் திமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்வேன்..
எடப்பாடி பழனிசாமி தலைமை தொடர்வதால் ஒரு இடத்தில் கூட அதிமுக பெறாது.. திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது இல்லை.. ஆனால் இந்த முறை முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சி நடத்தப் போகிறார்.. அதற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம்.. அவர் யாருடனும் ஒத்துப் போகாதது தான் காரணம்.. இந்த தேர்தலோடு எடப்பாடி பழனிசாமியின் கதை முடிந்தது.. முதல்வருக்கும், இந்த அரசுக்கும் ஆதரவாக பிரச்சாரம் செய்து தான் ஆக வேண்டும்.. அப்போது தான் தேசிய கட்சிகள் இங்கே உள்ளே வராது..” என்று தெரிவித்தார்..
Read More : ”ரஜினி எந்த அச்சுறுத்தலுக்கும் அஞ்சமாட்டார்.. ஆதவ் கூறியது பொய்.. ” திருமாவளவன் காட்டம்..!



