நெல்லையிலிருந்து சென்னை சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயிலில் திடீரென புகை வந்ததால் பயணிகள் அலறினர்.
தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் சென்று திரும்பும் விதமாக, வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி, சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் நெல்லையிலிருந்து இருந்து காலை 6:05 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் ரயில் 7:50க்கு மதுரை, 9:45க்கு திருச்சி வழியாக மதியம் 1:55 மணிக்கு எழும்பூர் செல்கிறது.
மறுமார்க்கத்தில் மதியம்2:45 மணிக்கு புறப்படும் ரயில் மாலை 6:35க்கு திருச்சி, இரவு 8:20க்கு மதுரை வழியாக இரவு 10:30 மணிக்கு திருநெல்வேலி செல்கிறது. இந்த ரயிலில் 7 AC சேர் கார் பெட்டிகளும், ஒரு எக்ஸிகியூட்டிவ் சேர்கார் பெட்டியும் என மொத்தம் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து, 6 நாட்கள் இயங்கப்படும் இந்த ரயில் மொத்தமுள்ள 650 கி.மீ. தூரத்தை 7 மணி நேரம் மற்றும் 50 நிமிடங்களில் சென்றடைகிறது.
இன்று காலை வழக்கம் போல் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயிலானது திண்டுக்கல் மாவட்டம் அருகே வந்த போது வடமதுரை பகுதியில் திடீரென ரயிலின் ஒரு பெட்டியில் இருந்து கரும் புகை வெளியேறியது. இதை அறிந்த பயணிகள் அச்சமடைந்து சத்தமிட்டனர்.
பயணி ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்த நிலையில் நடு வழியில் நிறுத்தப்பட்டது. ரயில்வே கார்டு ஆகியோர் சம்பந்தப்பட்ட பெட்டியில் சோதனை செய்ததில், ஏசியில் ஏற்பட்ட கோளாறால் கரும் புகை வெளியேறியது தெரியவந்தது. இதை அடுத்து, ஏசியில் ஏற்பட்ட கோளாறை தொழில்நுட்புனர்கள் பழுதை சரி செய்தனர். இதனால், சுமார் 30 நிமிடங்கள் ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால், அந்த வழியாக செல்லக்கூடிய மற்ற ரயில்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, அந்த ரயில்களும் பாதி வழியில் நிறுத்தப்பட்டன.
Read more: #Flash : ஹேப்பி நியூஸ்.. மீண்டும் தங்கம் விலை கிடுகிடு சரிவு.. நகைப்பிரியர்கள் நிம்மதி..