விஜய் டிவில் ஒளிபரப்பாகும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் சுனிதா. பின்னர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் ஓர் அடையாளத்தை ஏற்படுத்தியிருந்தார். தமிழ் முழுமையாக தெரியாத போதிலும், ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா?’ போன்ற நிகழ்ச்சிகளில் தனது நடன திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் தனித்த இடம் பிடித்தவர்.
தொடர்ந்து விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் அவர் வாய்ப்புகளை பெற்றதும், தனது திறமைகளை அழுத்தமாக நிரூபித்ததும் அவரை மக்கள் மனங்களில் நிலைத்த பிரபலமாக மாற்றியது. ஆரம்பகட்டத்தில் சிறிது உடல் பருமனுடன் காணப்பட்ட சுனிதா, பின்னர் தனது தோற்றத்தை மாற்றி ஃபிட் தோற்றத்துடன் திரும்பியிருந்தார். ஆனால், சமீபத்தில் மீண்டும் உடல் எடை கூடிய நிலையில், அதனைச் சமாளித்து மீண்டும் சுறுசுறுப்பாக வந்திருக்கிறார்.
சமீபத்தில் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு’க்கு அளித்த பேட்டியில், சுனிதா தனது 45 நாட்களில் 68.5 கிலோ எடையிலிருந்து 55 கிலோ வரை குறைத்திருக்கிறார். காலை நேரத்தில் பிளாக் காஃபியில் அரை ஸ்பூன் நெய் சேர்த்து குடிப்பதை வழக்கமாக வைத்துக் கொண்டுள்ளார். இது உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி அளிப்பதோடு, மெட்டாபாலிசத்தையும் தூண்டுவதாக கூறுகிறார்.
அத்துடன் வாரந்தோறும் திட்டமிட்ட உடற்பயிற்சி அட்டவணையை பின்பற்றுகிறார். வாரத்தில் இரண்டு நாட்கள் கார்டியோ, மூன்று நாட்கள் ஸ்ட்ரெங்க்த் ட்ரெயினிங் மற்றும் இரண்டு நாட்கள் ஓய்விற்கு ஒதுக்கி, உடலுக்கு தேவையான சமநிலையை பேணுகிறார். அதிகப்படியான அழுத்தமின்றி, நீண்ட காலத்திற்கு பயிற்சியை நிலைத்திருக்க வைக்கும் முறை இது என்கிறார்.
உணவுப் பழக்கங்களில் அதிக மரபு முறைகளில் செல்லாமல், தனக்கேற்ற வகையில் சீரான முறையை பின்பற்றியுள்ளார். மதிய உணவில் காய்கறிகள், பருப்பு வகைகள், சத்தான கொழுப்பு மற்றும் புரோட்டீன்கள் ஆகியவையே சாப்பிடுகிறார். அவ்வப்போது பரபரப்பாக பரவிய ட்ரெண்டிங் டயட் முறைகளை தவிர்த்ததுதான் இந்த வெற்றிக்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், மைதா மற்றும் சர்க்கரை பொருட்களை முற்றிலுமாக உணவில் இருந்து நீக்கியுள்ளார். அதற்கு பதிலாக முழுதானியங்கள், பாருப்பு வகைகள் போன்ற ஆரோக்கிய உணவுகளை சாப்பிடுகிறார். நாளின் தொடக்கத்தில் நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் நிறைந்த காலை உணவுகள் மூலம், முழுநாள் சுறுசுறுப்புடன் இருக்க முடிந்ததாக கூறுகிறார்.
நீரிழப்பின்றி உடலை ஈரமாக வைத்துக் கொள்வதும், டீடாக்ஸ் பண்புகள் கொண்ட பானங்களை உட்கொள்வதும் முக்கியம் என அவர் வலியுறுத்துகிறார். தண்ணீரில் எலுமிச்சை, வெள்ளரி, புதினா போன்றவை சேர்த்து குடிப்பது சுத்திகரிப்பு செயலுக்கு உதவுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Read More : எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்கக் கூடாதா..? ஜப்பானியர்களின் உணவு பழக்க ரகசியம்..!!