சூப்பர் அறிவிப்பு..!! ’ஓய்வூதியதாரர்கள் இனி சுலபமாக வீட்டில் இருந்தே இதை செய்யலாம்’..!!

மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்கள் தபால் மூலம் வீட்டிலிருந்தபடியே டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.


மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் நவ.1ஆம் தேதி முதல் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்கும்படி அரசு ஆணையிட்டுள்ளது. இதற்கிடையே, ஓய்வூதியதாரர்கள் நேரில் சென்று தங்களது உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்க சிரமப்படுகின்றனர். இந்நிலையில், இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி சார்பில், ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே பயோமெட்ரிக் முறையில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் (ஜீவன் பிரமான்) சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு சேவைக் கட்டணமாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.

சூப்பர் அறிவிப்பு..!! ’ஓய்வூதியதாரர்கள் இனி சுலபமாக வீட்டில் இருந்தே இதை செய்யலாம்’..!!

ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார் எண், மொபைல் எண், பிபிஓ எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களைத் தெரிவித்து கைவிரல் ரேகை பதிவு செய்தால் ஒருசில நிமிடங்களில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்க முடியும். இந்த டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சேவையைப் பெற விரும்பும் ஓய்வூதியதாரர்கள் அருகில் உள்ள அஞ்சலகம் அல்லது தங்கள் பகுதி தபால்காரரைத் தொடர்பு கொள்ளலாம். மேலும், https://ccc.cept.gov.in/ServiceRequest/request.aspx என்ற இணையதள முகவரி மூலம் அல்லது ‘Postinfo’ என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்து சேவை கோரிக்கையைப் பதிவு செய்யலாம் என்று முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

CHELLA

Next Post

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு..!! வெளியான மிக முக்கிய அறிவிப்பு..!!

Thu Nov 10 , 2022
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பழைய முறைப்படி பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கடந்த இரண்டு வருடங்களில் கொரோனா சூழல் காரணமாக பொதுத்தேர்வுகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதனால், உயர்கல்வியை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்கள் வழங்கியது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், சிபிஎஸ்இ கல்வி வாரியம் நேரடி […]
1007548 school covid outbreak

You May Like