தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் 97 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலிப்பணியிடங்கள்: திட்ட நிர்வாகி (தொழில் மேம்பாடு) – 13, திட்ட நிர்வாக (கணக்கு) – 18, திட்ட நிர்வாகி (திறன் மற்றும் வேலைகள்) -25, இளம் தொழில் வல்லுநர்கள் – 30, மாவட்ட நிர்வாக அதிகாரி – 2, திட்ட நிர்வாக (அக்கவுண்ட்ஸ் மற்றும் அட்மின்) – 1, திட்ட நிர்வாகி ( தொழில் நிறுவனங்களுக்கான நிதி விநியோகம்) – 1, செயல் அதிகாரி – 1 மற்றும் வட்டார குழு தலைவர் – 6 என மொத்தம் 97 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு: திட்ட நிர்வாகி (தொழில் மேம்பாடு), திட்ட நிர்வாக (கணக்கு) மற்றும் திட்ட நிர்வாகி (திறன் மற்றும் வேலைகள்) பதவிகளுக்கு அதிகபட்ச வயது 40ஆக இருக்க வேண்டும். இளம் தொழில் வல்லுநர்கள் பதவிக்கு 28 வயதிற்குள் இருக்க வேண்டும். மாவட்ட நிர்வாக அதிகாரி பதவிக்கு அதிகபட்சம் 45 வயதாகவும், இதர பதவிகளுக்கு அதிகபட்சம் 53 வயதாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி: அந்தந்த பதவிகளுக்கு ஏற்ற பாடப்பிரிவில் முதுகலை அல்லது இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 4 முதல் 8 ஆண்டுகள் வரை அனுபவம் தேவை. இளம் தொழில் வல்லுநர்கள் பதவிகளுக்கு Business Administration, rural management, business management, entrepreneurship development, social work, agriculture, automation, engineering, marketing, finance, HR என்ற பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: திட்ட நிர்வாகி (தொழில் மேம்பாடு), திட்ட நிர்வாக (கணக்கு) மற்றும் திட்ட நிர்வாகி (திறன் மற்றும் வேலைகள்) ஆகிய பதவிகளுக்கு மாதம் ரூ.20,000 சம்பளம். இளம் தொழில் வல்லுநர்கள் பதவிக்கு ரூ.45,000 சம்பளம். மாவட்ட நிர்வாக அதிகாரி பதவிகளுக்கு ரூ.75,000 – ரூ.1,25,000 வரை சம்பளம். இதர பதவிகளுக்கு ரூ.35,000 சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: https://tnjobs.tnmhr.com/Landing.aspx என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 2ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.