சூப்பர் திட்டம்..!! ரூ.10,000 முதலீடு செய்தால் ரூ.16 லட்சம் வருமானமா..? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..!!

போஸ்ட் ஆபிஸில் பல சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வங்கிகளில் நிலையான வைப்புத்தொகை (அ) சேமிப்புக் கணக்குகளில் முதலீடு செய்வது ஒரு வழி எனில், அஞ்சல் அலுவலக சேமிப்பு வாயிலாக பணத்தை முதலீடு செய்வது மற்றொரு சிறந்த வழியாகும். போஸ்ட் ஆபீஸில் தொடர்வைப்பு கணக்கை எந்த வயது வந்தோரும் (அ) 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளும் துவங்கலாம். இந்தியா போஸ்ட் இணையதளத்தின் படி மாதாந்திர குறைந்தபட்ச டெபாசிட் தொகையாக ரூ.100 கூட சேமிக்கலாம்.


ஜூலை 2022 முதல் அஞ்சலக தொடர் வைப்புத் திட்டத்திற்கு ஆண்டுக்கு 5.8% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இதற்குரிய கூட்டு வட்டி ஒவ்வொரு காலாண்டிலும் கணக்கிடப்படுகிறது. மத்திய அரசு தனது சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை ஒவ்வொரு காலாண்டிலும் நிர்ணயம் செய்கிறது. போஸ்ட் ஆபிஸ் RD கணக்கு திறக்கப்பட்ட நாளில் இருந்து 5 ஆண்டுகள் (அ) 60 மாதங்களுக்கு பின் முதிர்ச்சியடைகிறது. டெபாசிட் செய்பவர் 3 ஆண்டுகளுக்கு பின் போஸ்ட் ஆபிஸில் RD கணக்கை மூடலாம். அத்துடன் கணக்கு தொடங்கிய நாளில் இருந்து ஒரு ஆண்டுக்கு பின் 50% வரை கடனாக பெறலாம். கணக்கு முதிர்ச்சியடைவதற்கு ஒரு நாளுக்கு முன் மூடப்பட்டால், போஸ்ட் ஆபிஸ் சேமிப்புக் கணக்கின் அடிப்படையில் வட்டி விகிதங்கள் பயன்படுத்தப்படும்.

ஒரு போஸ்ட் ஆபிஸ் RD கணக்கை முதிர்வு தேதியில் இருந்து 5 ஆண்டுகள் வரை டெபாசிட் இன்றி வைத்திருக்க முடியும். இப்போதைய 5.8% வட்டி விகிதத்தில் மாதந்தோறும் ரூ.10,000 முதலீடு செய்தால், 10 ஆண்டுகளில் அத்தொகையானது உங்களுக்கு ரூ.16 லட்சம் வருமானத்தை தரும். அதே நேரம் 10 ஆண்டிற்கான உங்களது மொத்த வைப்புத் தொகை ரூ.12 லட்சமாக இருக்கும். அதுமட்டுமின்றி மதிப்பிடப்பட்ட வருமானம் சுமார் ரூ.4.26 லட்சமாக இருக்கும். எனவே, நீங்கள் பெறக்கூடிய மொத்த வருமானமானது ரூ.16.26 லட்சம் ஆக இருக்கும். இதற்கிடையே, கூட்டு வட்டியானது ஒவ்வொரு காலாண்டிலும் கணக்கிடப்படுகிறது. இது முதலீட்டாளர்களுக்கு அடிக்கடி வருவாயை ஈட்ட உதவும் என்பதால் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

CHELLA

Next Post

’மாணவர்களே இனி டிஸ்மிஸ் தான்’..!! ரூ.50,000 வரை அபராதமும் கூட..!! வெளியான பரபரப்பு உத்தரவு..!!

Fri Mar 3 , 2023
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அவ்வப்போது மாணவர்கள் மோதலில் ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளது. இதனால், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்கலைக்கழக நிர்வாகம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, மேம்படுத்தப்பட்ட விதிகளை பல்கலைக்கழக ஒழுங்கு விதிமுறை குழு பிறப்பித்துள்ளது. அதில் ‘பல்கலைக்கழக மாணவர்கள் தனிநபராகவோ அல்லது குழுவாகவோ சேர்ந்து வளாகத்திற்குள் போராட்டம், கைகலப்பு, அடிதடி, விடுதி வளாக பொருட்களை சேதப்படுத்தல், ராகிங் போன்ற சம்பவங்களில் ஈடுபடக் கூடாது. அவ்வாறு […]
Students college PTI compressed

You May Like