அதிமுகவுக்கு குவியும் ஆதரவு..!! புதிய கூட்டணி அறிவிப்பு..!! குஷியில் எடப்பாடி பழனிசாமி..!! அதிர்ச்சியில் திமுக..!!

Edappadi Palanisamy EPS 2026

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் உச்சக்கட்ட விறுவிறுப்பை எட்டியுள்ள நிலையில், பிரதான கட்சிகள் தங்களது கூட்டணிக் கணக்குகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த சூழலில், தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட சமூக வாக்கு வங்கிகளை கொண்டுள்ள அமைப்புகள் அதிமுக பக்கம் சாய்வது எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் தெம்பை அளித்துள்ளது.


மருதம் மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் வரவிருக்கும் தேர்தலில் அதிமுகவுக்கு தங்களது ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. இதையொட்டி, அந்தக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சந்தனப் பிரியா பசுபதி பாண்டியன், இன்று சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின் போது, அதிமுக தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறத் தங்களது முழு ஒத்துழைப்பு இருக்கும் என்பதை அவர் உறுதிப்படுத்தினார். சந்திப்பிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சந்தனப் பிரியா பசுபதி பாண்டியன், “எடப்பாடியார் தலைமையிலான அதிமுக கூட்டணிக்கு எவ்வித நிபந்தனையுமின்றி எங்களது ஆதரவை வழங்குகிறோம்” என தெரிவித்தார்.

Read More : Flash : காலையில் குறைவு.. மாலையில் உயர்வு.. ஆட்டம் காட்டும் தங்கம் விலை..! நிலவரம் இதோ..!

CHELLA

Next Post

2026-இல் தமிழ்நாட்டை ஆளப்போவது யார்..? கிங் மேக்கராக மாறும் விஜய்..!! திமுக - அதிமுக நிலவரம் என்ன..? வெளியானது புதிய கருத்துக் கணிப்பு..!!

Fri Feb 6 , 2026
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான முழக்கம் கேட்க தொடங்கியுள்ள நிலையில், முன்னணி செய்தி நிறுவனமான நியூஸ் 18 வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள் அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. ஆளுங்கட்சியான திமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இடையே கடும் பலப்பரீட்சை நிலவி வரும் சூழலில், நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் தமிழக அரசியலின் பாரம்பரியமான இருமுனைப் போட்டியைச் சிதைத்து, ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கியுள்ளது. இந்தக் கருத்துக்கணிப்பின்படி, முதலமைச்சர் […]
Vijay Stalin Eps 2025

You May Like