Breaking : வழக்கு குறித்து ஊடகங்களில் பேசக்கூடாது.. சீமான், விஜயலட்சுமிக்கு உச்சநீதிமன்றம் தடை..

seemanjik 1

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, பிரபல நடிகை விஜயலட்சுமி 2011ஆம் ஆண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் திருமணம் செய்வதாக கூறி உடலுறவு வைத்துக் கொண்டு, 7 முறை கர்ப்பத்தை கலைத்தார் கூறியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், சீமான் மீது இந்திய தண்டனைச் சட்டம் 376வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.


இந்த சூழலில் கடந்த 2023 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், 12 வாரங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டனர்.

பின்னர், இந்த உத்தரவை எதிர்த்து சீமான் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். அதில், இரு தரப்பும் அமர்ந்து பேசி தீர்வு காண அறிவுறுத்திய உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. ஆனால், நடிகை தரப்பு சமரசத்திற்கு தயாரில்லை என்று தெரிவித்தது. இதையடுத்து, நீதிமன்றம் இடைக்காலத் தடையை மேலும் 4 வாரங்கள் நீட்டித்தது.

பாலியல் புகார் வழக்கை ரத்து செய்யக் கோரும் சீமானின் மேல்முறையீடு மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று நடிகை விஜயலட்சுமி கோரிக்கை விடுத்தார்.. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கடந்த 12-ம் தேதி வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர்.. அப்போது திருமணம் செய்யும் எண்ணம் இல்லாமல் போலி நம்பிக்கை கொடுத்து என்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என விஜயலட்சுமி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் சீமான் மன்னிப்பு கேட்க உத்தரவிட்டனர். மன்னிப்பு கோரும் மனுவை தாக்கல் செய்யவில்லை என்றால் சீமான் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை ஏற்க மாட்டோம் எனவும் தெரிவித்தனர்.

இந்த நிலையில், சீமானுக்கு எதிராக நடிகை தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.. மன்னிப்பு கேட்க ஒப்புக்கொண்டு விட்டு பொதுவெளியில் தன்னை பற்றி சீமான் அவதூறாக பேசுவதாக நடிகை தரப்பு முறையீடு செய்தது.. அப்போது நீதிபதிகள் “ சீமானும் நடிகையும் ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டு இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.. இருவரும் குழந்தைகள் அல்ல என்பதை நினைவில் கொண்டு பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.. சீமான் நடிகை இருவரும் பரஸ்பரம் மன்னிப்பு கேட்டு வழக்கை முடிக்காவிடில் இருவரையும் நீதிமன்றம் வரவைக்க நேரிடும்..:” என்று எச்சரித்த நீதிபதிகள் வழக்கை பிற்பகலுக்கு ஒத்திவைத்தனர்..

இந்த வழக்கு இன்று பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வந்தது.. அப்போது மன்னிப்பு கேட்ட பிறகும் தனக்கு எதிராக 5000 வீடியோக்களை விஜயலட்சுமி வெளியிட்டதாக சீமான் தரப்பு வாதிட்டது.. மேலும் தன்னை பொறுத்தவரை இந்த பிரச்சனை தீர வேண்டும் என்று சீமான் தரப்பு கூறியது.. அப்போது நீதிபதி சீமான் தரப்பு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் திருப்திகரமாக இல்லை, மன்னிப்பு கோரிய தோரணை என்பது சரியானதாக இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்..

இரு தரப்பும் அனைத்து புகார்களையும் திரும்ப பெற வேண்டும் என்றும், புகார்களை திரும்ப பெற்றதையும் மன்னிக்கப்பட்டதையும் பிரமாண பத்திரங்களாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டனர்.. இரு தரப்பும் இந்த விவகாரம் குறித்து எந்த ஒரு பேட்டியோ அல்லது காணொலியோ வெளியிடக் கூடாது எனவும் குறிப்பாக இந்த வழக்கு குறித்து ஊடகங்களில் இருவரும் பேசக்கூடாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.. மேலும் உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்த நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்..

அதே நேரத்தில் விஜயலட்சுமி தரப்பு, சீமான் மீதான அனைத்து புகார்களையும் திரும்ப பெறுவதாகவும், ஆனால் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் தெரிவித்தது.. அப்போது நீதிபதிகள், ஓரிடத்தில் நீங்கள் மன்னிப்பை எதிர்பார்க்கும் போது நீங்கள் மன்னிப்பு கேட்டு தான் ஆக வேண்டும்.. மன்னிப்பு கேட்க முடியாது என்றால் நீங்கள் மன்னிப்பை எதிர்பார்க்காதீர்கள் என்று தெரிவித்தனர்..

Read More : குடும்ப உறவுகளை துண்டிக்க கணவனை கட்டாயப்படுத்துவது கொடுமைக்கு சமம்..!! – டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி..

RUPA

Next Post

அமேசானில் பஜாஜ் பல்சருக்கு மிகப்பெரிய தள்ளுபடி… வட்டியில்லா EMI விருப்பம்!

Wed Sep 24 , 2025
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேலில் பஜாஜ் பல்சர் 125 மோட்டார் சைக்கிளுக்கு மிகப்பெரிய சலுகை வழங்கப்படுகிறது. நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் நல்ல மைலேஜ் கொண்ட இந்த பஜாஜ் பைக்கை வீட்டிலிருந்தே முன்பதிவு செய்யலாம். மிகப்பெரிய தள்ளுபடிகள் மற்றும் எளிதான EMI விருப்பங்களும் உள்ளன. GST குறைப்பு, அமேசான் சலுகை மற்றும் வங்கி தள்ளுபடி மூலம், குறைந்த விலையில் பஜாஜ் பல்சர் பைக்கை நீங்கள் சொந்தமாக்கிக் கொள்ளலாம். பஜாஜ் பல்சர் […]
1 Bajaj Pulsar 125 Neon Disc Now at Rs 61000 in Amazon Great Indian Festival Limited Time Deal with Huge Bank Discounts and Easy EMI 2025 09 b294f9f1ebfb6f6581bf2edace850784

You May Like