6 மாதங்களுக்கு ஒருமுறை இருநாடுகள் ஒரேதீவை ஆட்சி செய்யும் ஆச்சரியம்!… எங்கே? ஏன் தெரியுமா?

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் இடையே அமைந்துள்ள ஃபெசன்ட் தீவை பற்றிதான் நாம் தெரிந்துக்கொள்ள போகிறோம். இவ்விரு நாடுகள் தான் ஃபெசன்ட் தீவை 6 மாதங்களுக்கு ஒருமுறை மாறி மாறி ஆட்சி செய்கின்றன.


பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் இடையே அமைந்துள்ளது ஃபெசன்ட் தீவு. 200 மீட்டர் நீளமும் சுமார் 40 மீட்டர் அகலமும் கொண்ட இந்த தீவு ஆற்றின் நடுவில் அமைந்துள்ளது. இருநாடுகளுக்கிடையே அமைந்துள்ள இந்தத் தீவை, யார் ஆட்சி செய்வது என்று பல நூற்றாண்டுகளாக குழப்பத்தில் இருந்து வந்துள்ளது. அதன் பிறகு பிரான்சும் ஸ்பெயினும் இந்த தீவு தொடர்பாக பரஸ்பர சம்மதத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

இவ்விரு நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தத்தின் படி 1,659 ஆம் ஆண்டு, ஃபெசன்ட் தீவு தொடர்பாக பைன்ஸ் என்று அழைக்கப்படும் ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி, 6 மாதங்கள் பிரான்ஸும் அடுத்த 6 மாதங்கள் ஸ்பெயின் நாடும் ஆட்சி செய்ய முடிவு எடுக்கப்பட்டது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்வென்றால், இந்த தீவு தொடர்பாக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினுக்கு இடையே இதுவரை போர் நடந்ததில்லை என்பது தான். பிரான்சும் ஸ்பெயினும் இந்த தீவை 6 மாதங்களுக்கு ஒருமுறை மிகவும் அமைதியான முறையில் ஆட்சி செய்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒருபுறம் உலக நாடுகளான ரஷ்யா, உக்ரைன், இந்தியா-சீனா என எல்லா இடங்களிலும் எல்லை பகுதியில் போர் தொடுத்துக் கொண்டிருக்கின்றன. மறுபுறம், எவ்வித போர் நடக்காமல் அமைதியாக முறையில் இருநாடுகள் ஒரு தீவை ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒருமுறை ஆட்சி செய்துவருவது என்பது குறிப்பிடத்தக்கது

KOKILA

Next Post

இந்த வேதிப்பொருள் அடங்கிய மேக்கப் கிட்டை பயன்படுத்தாதீர்!... புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும்!... ஆராய்ச்சியில் ஷாக்!

Wed Mar 15 , 2023
சல்பேட் பராபென்ஸ் என்ற வேதிப்பொருள் கலக்கப்படும் அழகுசாதன பொருட்களை (மேக்கப் கிட்) பயன்படுத்த வேண்டாம் என்றும் இது புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் என்றும் ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நவீன காலத்திற்கேற்ப உணவு, வாழ்க்கை முறைகள் மாறிவருகின்றன. இதுமட்டுமல்லாமல், ஆடைகள் அழகு சாதன பொருட்களின் தேவையும் அதிகமாகிவிட்டன. இந்த சூழலில் இயற்கையை விட்டு, செயற்கையான கெமிக்கல்கள் கொண்ட உணவு வகைகள் மற்றும் அழகு சாதனம் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்துகிறோம். அதன்படி, […]
face cream

You May Like