கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடி சூர்யா – ஜோதிகா காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு தேவ் என்ற மகனும், தியா என்ற மகளும் இருக்கிறார்கள். இப்போது மும்பையில் வசித்துவரும் அவர்கள் சினிமாக்களில் நடிப்பதில் பிஸியாக இருந்துவருகிறார்கள். திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் நடிக்காமல் இருந்த ஜோதிகா 36 வயதினிலே மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.
தொடர்ந்து ராட்சசி, உடன்பிறப்பே என ஏகப்பட்ட படங்களில் நடித்த அவர் இப்போது பாலிவுட்டில் பிஸியாக ஆரம்பித்திருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் ஷைத்தான் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின. இரண்டு படங்களும் நல்ல வரவேற்பையே பெற்றன. அவர் தொடர்ந்து நடிப்பதற்கு சூர்யா சப்போர்ட்டாக இருக்கிறார்.
இதற்கிடையே சூர்யாவின் தந்தை சிவக்குமாருக்கும், ஜோதிகாவுக்கும் பிரச்னையால்தான் மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்கள் என்று வதந்தி கிளம்பியது. ஆனால் சூர்யா சமீபத்திய பேட்டியில் மறைமுகமாக மறுத்திருந்தார். இந்நிலையில் ஜோதிகாவுக்காக சூர்யா செய்த செயல் ஒன்று தெரியவந்திருக்கிறது. அதாவது இருவரும் சேர்ந்து நடித்து சூப்பர் ஹிட்டான படங்களில் ஒன்று சில்லுனு ஒரு காதல்.
அந்தப் படத்தின் கதையை இயக்குநர் கிருஷ்ணா, சூர்யாவிடம் சொல்லும்போது அவருக்கு பிடிக்கவில்லையாம். அதேசமயம் ஜோதிகாவிடம் அவர் சொல்லியபோது ஜோவுக்கு பிடித்திருக்கிறது. இந்த விஷயம் சூர்யாவுக்கு தெரிந்ததையடுத்து; ஜோதிகாவுக்கு ஏன் இன்னொருவர் ஜோடியாக நடிக்க வேண்டும். நாமே நடிக்கலாம் என்று முடிவு செய்துதான் அந்தப் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டாராம்.



