கருப்பு படத்தில் ஹீரோவாக நடிக்க சூர்யா முதல் சாய்ஸ் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ரெட்ரோ படத்தை தொடர்ந்து சூர்யா நடிக்கும் படம் கருப்பு.. ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் இந்த படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கிறார்.. இதன் மூலம் பல ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யா – த்ரிஷா ஜோடி மீண்டும் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.. மேலும் நட்டி, இந்திரன்ஸ், அனகா மாயா ரவி, ஸ்வாசிகா, ஷிவதா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஆல்பங்கள் மூலம் பிரபலமான சாய் அபயங்கர் முதன்முறையாக இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்..
இந்த படம் இந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.. சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று கருப்பு படத்தின் டீசரை படக்குழு நேற்று வெளியிட்டது..
இந்த நிலையில் கருப்பு படத்தில் ஹீரோவாக நடிக்க சூர்யா முதல் சாய்ஸ் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆம்.. த்ரிஷாவை வைத்து மாசாணி அம்மன் என்ற பெயரில் இந்த படத்தை எடுக்க ஆர்.ஜே பாலாஜி விரும்பினாராம்..
இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி (ஆர்.ஜே.பி) முதலில் த்ரிஷாவை கதாநாயகியாக வைத்து இந்தப் படத்தை உருவாக்க விரும்பினார். இந்தப் படத்திற்கு மாசாணி அம்மன் என்று பெயரிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.. மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாரா நடித்ததைப் போன்று, மாசாணி அம்மன் என்ற ஹீரோயினை மையமாக கொண்ட படத்தில் த்ரிஷா நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால், இந்த படம் பின்னர் தொடங்கப்படவில்லை.. பின்னர் இந்த கதைக்குள் சூர்யா வந்த பின்னர், அதற்கு ஏற்றவாறு ஸ்கிரிப்ட் திருத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.. இருப்பினும் இது எந்தளவு உண்மை என்பது தெரியவில்லை..
சூர்யாவின் அடுத்த படம்
லக்கி பாஸ்கர் புகழ் வெங்கி அட்லூரி இயக்கும் தற்காலிகமாக பெயரிடப்பட்ட சூர்யா 46 படத்தில் சூர்யா நடிக்க உள்ளார்.. இந்த படத்தில் குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்றும், மமிதா பைஜு ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.



