ஒடிசாவின் கஜபதி மாவட்டத்தில் சூனியம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் ஒரு கும்பல், 35 வயது நபரைக் கொன்று, அவரது அந்தரங்க உறுப்பை துண்டித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டம் மோகனா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மலசபதர் கிராமத்தில் சனிக்கிழமை இரவு நேரத்தில் சூனியம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் கோபால் என்பவரை, கிராமவாசிகள் அந்த நபரை கழுத்தை நெரித்து கொன்று, அவரது அந்தரங்க உறுப்பை துண்டித்து, உடலை அருகிலுள்ள ஹரபாங்கி அணையில் வீசியதாகக் கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை நீர்த்தேக்கத்தில் இருந்து போலீசார் உடலை மீட்டனர். ஜி உதயகிரி துணைப்பிரிவு காவல் அதிகாரி சுரேஷ் சந்திர திரிபாதி கூறுகையில், விசாரணைக்காக 14 கிராம மக்களிடம் விசாரித்து வருகிறோம் என்று கூறினார்.
மேலும், இளம்பெண் ஒருவர், சுமார் பதினைந்து வாரங்களுக்கு முன்பு அந்த ஆணின் சூனியத்தால் இறந்திருக்கலாம் என்று கிராம மக்கள் சந்தேகிக்கின்றனர். மேலும், கிராம மக்களுக்கு பயந்து, அந்த நபர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள தனது மாமனார் வீட்டிற்குச் சென்று, தனது கால்நடைகள் மற்றும் ஆடுகளைப் பராமரித்து வந்துள்ளார்.
இருப்பினும், சனிக்கிழமை இரவில் கோபால் கால்நடைகளை அழைத்துச் செல்ல தனது கிராமத்திற்குத் திரும்பியபோது, அவர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார். உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Readmore: மக்களே…! இன்று இந்த மாவட்டத்தில் கனமழை… மீனவர்கள் கடலுக்கு போக வேண்டாம்…!