சுவிடர்லாந்தில் உள்ள கிரான்ஸ்-மொன்டானா என்ற பனிச்சறுக்கு ஓய்வு விடுதி நகரத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட ஒரு பயங்கர வெடிப்பில் பலர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த வெடிப்பு காரணமாக தீ விபத்தும் ஏற்பட்டது.. ஒரு ஆடம்பரமான ஆல்பைன் பனிச்சறுக்கு ஓய்வு விடுதிக்குள் இருந்த ஒரு பாரில் நிகழ்ந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிரான்ஸ்-மொன்டானா சுற்றுலாப் பயணிகளிடையே, குறிப்பாக பிரிட்டிஷ் நாட்டினரிடையே மிகவும் பிரபலமானது. இது சுவிட்சர்லாந்தின் சியர் மாவட்டத்தின் அமைந்துள்ளது, இது தலைநகர் பெர்னிலிருந்து கிட்டத்தட்ட இரண்டு மணி நேர பயண தூரத்தில் உள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக மக்கள் கிரான்ஸ்-மொன்டானாவில் கூடியிருந்த நேரத்தில் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
சுவிட்சர்லாந்து காவல்துறையின் அதிகாரி ஒருவர் பேசிய போது “ சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான ‘லே கான்ஸ்டலேஷன்’ பாரில் அதிகாலை 1.30 மணியளவில் (உள்ளூர் நேரம்) (00:30 GMT) இந்த வெடிப்பு குறித்துத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், வெடிப்புக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாகவும் அந்த அதிகாரி கூறினார்.
தென்மேற்கு சுவிட்சர்லாந்தில் உள்ள வாலிஸ் மாகாணத்தின் காவல்துறை செய்தித் தொடர்பாளர் கெய்டன் லாத்தியன் இதுகுறித்து பேசிய போது “அறியப்படாத காரணத்தால் ஒரு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. பலர் காயமடைந்துள்ளனர், மேலும் பலர் உயிரிழந்துள்ளனர்.” என்று கூறினார்..
அந்த பாரின் அடித்தளத்தில் இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன, அங்கு சுமார் 400 பேர் தங்க முடியும். இந்தச் சம்பவத்தில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பதை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை என்றாலும், 2012-ல் சுவிட்சர்லாந்தில் நடந்த சியர் பேருந்து விபத்தில் 28 பேர் உயிரிழந்தது போல, இந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கிரான்ஸ்-மொன்டானாவில் வெடிப்பைத் தொடர்ந்து பாரில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான படங்களும் காணொளிகளும் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.
Read More : புத்தாண்டில் இப்படியொரு சோகமா..? ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!! பீதியில் அலறியோடிய மக்கள்..!!



