பிரான்ஸ் நாட்டின் புறநகர் பகுதியான நான்டெர்ரேயில் 17 வயது இளைஞர் நஹேல் என்பவர் தனது வாடகை காரில் சென்று கொண்டிருந்த போது காவல்துறையினரால் சுடப்பட்டது பிரான்ஸ் மக்களை போராட்டக் களத்திற்கு இழுத்துள்ளது. நான்டெர்ரேயின் அவென்யூ ஜோலியட்-கியூரி என்ற பகுதியில் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் கூறுகையில் ஆவணங்களை சரிபார்ப்பதற்காக காரை நிறுத்தியபோது காரை நிறுத்தாமல் காவல்துறையினர் மேல் ஏற்றுவது போல் சென்றார். […]