பாகிஸ்தானின் கராச்சியில் சுதந்திர தின கொண்டாட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 8 வயது சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். பாகிஸ்தானில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாடு முழுவதிலும் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில், கராச்சியில் நடந்த வெவ்வேறு கொண்டாட்ட நிகழ்வுகளில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில், 8 வயது சிறுமி உட்பட 3 பேர் பலியாகினர். பல்வேறு பகுதியில் இருந்து 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். […]