30 ஆண்டுகளாக திரைப்பட உலகில் இருந்தாலும், பாலிவுட் துறை தனது பணியை முழுமையாக அறியவில்லை என்றும் பாலிவுட் சினிமாவில் கொடுக்கப்படும் சம்பளம், தென்னிந்திய சினிமாவில் பெறும் சம்பளத்தில் பத்து சதவீதம் (1/10) மட்டுமே என்று நடிகை சிம்ரன் பேசியுள்ளார். தென்னிந்திய ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்த சிம்ரன், திரையுலகில் அறிமுகமான ‘சனம் ஹர்ஜை’ திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகளைக் கடந்திருக்கிறது. அத்தோடு சிம்ரனும் சினிமாவில் 30 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். […]