இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பு உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 1991இல் வெளியான திரைப்படம் சின்ன தம்பி. இன்றுடன் இந்தப் படம் வெளியாகி 32 ஆண்டுகளாகிறது. அன்றைய காலகட்டத்தில் மிக பிரம்மாண்டமான வெற்றிப் படமாக சின்னத் தம்பி அமைந்தது. கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கும் மேலாக திரையரங்குகளில் ஓடியதாக கூறப்படுகிறது. தூலியிலே ஆட வந்த, போவோமா ஊர்கோலம் என இளையராஜா இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. […]