வடமேற்கு வெனிசுலாவில் நேற்று (புதன்கிழமை) 6.2 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் உலுக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையப் புள்ளி, சுலியா மாநிலத்தில் உள்ள மேனே கிராண்டே (Mene Grande) என்ற பகுதியின் கிழக்கு-வடகிழக்கு திசையில் 15 மைல்கள் (24 கிலோமீட்டர்கள்) தொலைவில் அமைந்திருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தலைநகர் கரக்காஸிலிருந்து 370 மைல்கள் (600 கிலோமீட்டர்கள்) மேற்குப் பகுதியில் உள்ளது. நிலநடுக்கத்தின் ஆழம் 5 […]