சென்னை மாதவரம் பால்பண்ணை 87வது தெருவில் வசித்து வருபவர் சாம்சன். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி புஷ்பராணி. இந்த தம்பதிக்கு 7 மாத ஆண் குழந்தை உள்ளது. நேற்று சாம்சன் வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது புஷ்பராணி சமையல் அறையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, டிவி அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை எதிர்பாராதவிதமாக மின் சாதனத்தை தீண்டியதில் மின்சாரம் பாய்ந்தது. […]