வெள்ளிக்கிழமைகளே சிறப்பான நாட்கள்தான். அதிலும், ஆடி வெள்ளியும் தை வெள்ளியும் அம்மனின் வழிபாட்டிற்கு உரிய நாட்களாகும். எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கிழமைக்கு ஈடாகாது. அன்று எல்லா அம்மன் கோயில்களிலும் அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் ஜொலிப்பாள். ஆடி வெள்ளியன்று விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் வீட்டில் இன்பங்கள் தேடி வந்துகொண்டே இருக்கும். எட்டு வகை லட்சுமிகளுக்கும் இனிய விழா எடுப்பது ஆடி மாதமாகும். கிழமைகளில் சுக்கிர வாரம் என்று […]