முகவரி மாறி வசிப்பவர்கள் கவலைப்படத் தேவையில்லை என தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இந்தியாவில் கடந்த 1951 முதல் 2004 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி 8 முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 2002-04 காலகட்டத்தில் இப்பணி மேற்கொள்ளப்பட்டது. சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு, பிஹார் மாநிலத்தில் சமீபத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடத்தப்பட்டது. இந்த நிலையில், 2026 தொடக்கத்தில் தமிழகம், […]

