முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் அக்டோபர் 6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதுள்ள ஐஐடி உட்பட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர கேட் (Graduate Aptitude Test in Engineering) எனும் தேசிய நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. கேட் நுழைவுத் தேர்வு இயந்திரவியல், கட்டிடவியல் உட்பட 30 பாடப்பிரிவுகளில் கணினி வழியில் நடத்தப்படும். மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு […]
Admission
கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் (பிஏ, பிஎஸ்சி) சேருவதற்கான வயது வரம்பு 40 ஆகவும், பெண்கள் மற்றும் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 43 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர்கல்வித்துறை செயலர் வெளியிட்டுள்ள அரசாணையில்: தற்போது, கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளில் (பிஏ, பிஎஸ்சி, பிகாம், பிபிஏ போன்றவை) சேருவதற்கான வயது வரம்பு 21 ஆக இருந்து வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு 5 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி, […]
தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு செப்டம்பர் 30-ம் தேதி வரை இணையதளம் வழியாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பாடப் பிரிவுகளுக்கான மாணவர்கள் சேர்க்கை முடிவடைந்துள்ளது. இந்தக் கல்லூரிகளில் உள்ள காலியிடங்களைப் பூர்த்தி செய்யப்பட்டவுள்ளன. ஏற்கெனவே, விண்ணப்ப பதிவு மேற்கொள்ள […]
தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு செப்டம்பர் 30-ம் தேதி வரை இணையதளம் வழியாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் வியாழக்கிழமை அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பாடப் பிரிவுகளுக்கான […]
ஐடிஐ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என வேலைவாய்ப்பு பயிற்சித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின்கீழ் 132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும் (ஐடிஐ), 311 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் இயங்கி வருகின்றன. இவற்றில் நடப்பு கல்வி ஆண்டில் (2025-26) நேரடி மாணவர் சேர்க்கைக்கான காலஅவகாசம் ஜூலை 31 வரை வழங்கப்பட்டிருந்தது. தற்போது மாணவர்களின் நலன் கருதி நேரடி சேர்க்கை ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டது. இதற்கான […]
எம்எட் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்எட் படிப்பில் நடப்பு கல்வியாண்டு (2025-26) மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. எம்எட் படிப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் www.tngasa.in என்ற இணைய தளத்தை பயன்படுத்தி இன்று மாலை வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக உயர்கல்வித் […]
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை பட்டப் படிப்புக்கு தொடர்ந்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூலை 31 என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் விண்ணப்பப் பதிவை இன்று முதல் தொடர்ந்து மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக உயர் கல்வி அமைச்சர் வெளியிட்ட […]
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான துணை கலந்தாய்வுக்கு ஆகஸ்ட் 12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் வெளியிட்ட அறிவிப்பில்; நடப்பு கல்வியாண்டில் (2025-26) பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வில் நிரப்பப்படாத இடங்களுக்கு துணை கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதில் பிளஸ்-2 துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் பொது கலந்தாய்வில் கலந்துகொள்ள இயலாத மாணவர்கள் பங்கேற்கலாம். […]
முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 31-ம் தேதி கடைசி நாள் என உயர் கல்வித் துறை தெரிவித்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவுக்கான காலஅவகாசம் ஜூலை 15-ம் தேதியுடன் முடிவடைந்தது. முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில், மாணவர்களின் நலன் கருதி கடைசி நாள் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று […]
3 ஆண்டு சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம், சென்னை வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, 2025-2026 கல்வியாண்டுக்கான 3 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் 12.05.2025 முதல் தொடங்கியது. விருப்பமுள்ள மாணவர்கள் B.A LLB.(Hons), B.B LLB.(HONS), B.COM .LLB .(HONS), மற்றும் BCA,LLB (HONS) படிப்புகளில் சேர்வதற்காக “School of Excellence in Law”, சென்னை மற்றும் […]

