இன்றைய காலத்தில் ஆடு, மாடு, கோழி வளர்ப்பு தொழிலை பலரும் ஆர்வமாக செய்து வருகிறார்கள். விவசாயிகள் உள்பட பலரும் கூடுதல் வருமானத்திற்காக இதுபோன்ற வளர்ப்பு தொழிலில் ஈடுபடுகிறார்கள். நம் நாட்டிலுள்ள விளிம்புநிலை விசாயிகளின் வருமானத்தை பெருக்கிக் கொள்ள ஆடு, மாடுகள் முக்கிய பங்காற்றுகிறது. இவை இறைச்சிக்காவும், பாலிற்காகவும் வளர்க்கப்படுகிறது. இதற்கான தேவை உலகம் முழுவதும் அதிகமாக …