டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மீண்டும் ஹாங்காங்கில் அவசரமாக தரைறக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹாங்காங்கிலிருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாகப் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மீண்டும் ஹாங்காங் விமான நிலையத்திற்கே சென்றது. போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தால் இயக்கப்படும் AI315 விமானம், திட்டமிட்டபடி ஹாங்காங்கிலிருந்து புறப்பட்டது, ஆனால் விமானி ஒரு கணினி செயலிழப்பைக் கண்டறிந்ததால் நடுவானில் திருப்பி அனுப்பப்பட்டது […]