fbpx

தமிழகத்தில் 21ம் தேதி வரை தொடக்கப் பள்ளி தேர்வுகள் நடைபெற இருந்த நிலையில், கோடை காலம் என்பதால் மாணவர்களின் நலன் கருதி, அனைத்துப் பள்ளிகளிலும் 17ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தென் மாநிலங்கள் உட்பட சில வட மாநிலங்களிலும் தற்போதே வெயில் கொளுத்தி வருகிறது. வழக்கமாக மார்ச் ஏப்ரல் …

12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் வரும் ஏப்ரல் 4ம் தேதி தொடங்க உள்ளது.

தமிழக மாநிலப் பாடத்திட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3-ம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது. இந்த தேர்வினை 7 ஆயிரத்து 518 பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 …

தமிழ்நாடு அரசின் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் திறனை பொது வெளியில் ஓபன் சேலஞ்ச் ஆக செயல்படுத்திக் காட்ட வேண்டும் என அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், மாநிலத்தில் 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும் நேரில் சென்று ஆய்வு …

அரசுப் பள்ளிகளில் இம்மாதம் முதல் மாணவர் சேர்க்கை தொடங்கிய நிலையில், 12 வேலை நாட்களில் 81,797 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 9,100 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள மாணவர்களை அரசு பள்ளிகளை நோக்கி ஈர்க்கும் வகையில் 2025-2026-ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை …

பாலியல் தொல்லை தொடர்பான புகார்களை மாணவர்கள் முன்வந்து தெரிவிக்கலாம் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில் வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல், ஈரோடு பெண்ணுக்கு கொடைக்கானல் ரோடு அருகே ரயிலில் பாலியல் சீண்டல், கிருஷ்ணகிரி, …

எந்த மாநிலத்துக்குமே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி முழுமையாக வழங்கப்படாமல் இருக்கும்போது, தமிழகத்துக்கான நிதியைப் பிற மாநிலங்களுக்குக் கொடுத்து விட்டார்கள் என்று பொய் சொல்லி அரசியல் செய்ய வெட்கமாக இல்லையா..? என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு மத்திய அரசின் Samagra Shiksha திட்டத்தின் கீழ் 2024-2025 ஆண்டில் 3 தவணைகளாக வழங்கப்பட …

பள்ளிக் கல்வித் துறையில் 28,030 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 47,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரமாக்கப்பட்டுள்ளன.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அரசாணையில்; பள்ளிக் கல்வித் துறையில் முதன்மை கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், சட்ட அலுவலர் உள்பட 55 வகையான பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தற்காலிகமாக …

வரும் 23-ம் தேதிக்குள் ஆசிரியர்கள் மணற்கேணி செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில்; தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு கணிப்பொறிகள் (Desktop Computers), மடிக்கணினிகள் (Laptops) மற்றும் ஆசிரியர்களுக்கு கைக்கணினிகள் (TABs) வழங்கப்பட்டு உள்ளன. மேலும் தமிழ்நாட்டில் செயல்படும் …

நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ திட்டத்துக்கு தங்களது பங்களிப்பை தருவதாக கூறிய தனியார் பள்ளி சங்கத்துக்கு நன்றிதான் கூறினேன். இது தெரியாமல், அரசுப் பள்ளிகளை தத்துக்கொடுத்து விட்டதாக கண்டன அறிக்கை வெளியிடுவதை வன்மையாக கண்டிக்கிறேன் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறி இருந்தார். இந்த நிலையில் அரசு சார்பில் …

கல்வித் துறைக்கு அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட ரூ.44,042 கோடி எங்குதான் செல்கிறது என பாஜக மாநில தலைவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; நேற்றைய தினம் நடைபெற்ற, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் துவக்க விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்றான, 500 அரசுப் பள்ளிகள், அவற்றின் அருகிலிருக்கும் தனியார் பள்ளிகளால் …