டெல்லியின் கஞ்சவாலா பகுதியில் அஞ்சலி(20) என்ற இளம்பெண் விபத்தில் சிக்கி 13 கிலோமீட்டர் தூரம் இழுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரில் இருந்த 5 போரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த அஞ்சலி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என்று குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பிய நிலையில், இன்று வெளியான பிரேதபரிசோதனை அறிக்கையில் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை, பல கிலோமீட்டர் இழுத்து செல்லப்பட்டதாலேயே இளம்பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுளது. […]