குரூப்-4 விடைத்தாள் அட்டை பெட்டிகள் முறையாக சீலிடப்படாமல், ஆங்காங்கே உடைக்கப்பட்டு இருப்பதால் சர்ச்சையாக மாறியுள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 3,935 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு, கடந்த 12-ம் தேதி நடைபெற்றது. டிஎன்பிஎஸ்சி நடத்திய இத்தேர்வை 13.48 லட்சம் பேர் எழுதினர். தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 3.935 […]