உத்தரபிரதேசத்தில் ரயில் நிலையத்தில் பிரசவ வழியால் துடித்துக் கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு, பிரசவம் பார்த்த ராணுவ மருத்துவருக்கு ராணுவ தளபதி உபேந்திரா திவேதி பாராட்டு தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் பன்வேல்-கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்த கர்ப்பிணிப் பெண், ஜான்சி நிலையத்தில் இறக்கியபோது, அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டது. இதை அறிந்த மேஜர் பச்வாலா உடனடியாகச் செயல்பட்டு, ரெயில்வே ஊழியர்களின் உதவியுடன் நடைமேடையிலேயே பிரசவம் பார்க்க முடிவு செய்தார். […]