பாலிடெக்னிக் படித்த மாணவர்கள் அரியர் பாடங்களில் தேர்வெழுத சிறப்பு வாய்ப்பு அளிக்கப்படுவதாக உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் ; பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து குடும்பச் சூழ்நிலைகளால் தேர்ச்சி பெறாமல் நிலுவை வைத்துள்ள பாடங்களுக்கு (அரியர்ஸ்) தேர்வெழுத சிறப்பு வாய்ப்பு அளிக்குமாறு மாணவர்களிடமிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றன. …