திரிபுராவில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்கு அமர்நாத் யாத்திரை பணிக்காக எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர்கள் பாழடைந்த மற்றும் அழுக்குப் பெட்டிகளைக் கொண்ட ரயிலில் அழைத்துச் செல்லப்பட்டது தொடர்பான விவகாரத்தில் 4 அதிகாரிகளை இடைநீக்கம் செய்து, விசாரணை நடத்தவும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார். இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9 ம் தேதி வரை 38 நாட்கள் நடைபெற உள்ளது. […]