700க்கும் மேற்பட்ட கிளைகளில் சுமார் 8.5 லட்சம் போலி கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன என்பது சிபிஐ சோதனையில் தெரியவந்துள்ளது. சைபர் மோசடி மற்றும் ‘டிஜிட்டல் கைது’ வழக்குகளை தடுக்கும் வகையில் ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, உத்தரகாண்ட் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள 42 இடங்களில் ஆபரேஷன் சக்ரா-5 என்ற பெயரின் சிபிஐ சோதனை மேற்கொண்டது. போலி வங்கிக் கணக்குகள் மூலம் மக்களை ஏமாற்றிய குற்றவாளிகளின் மறைவிடங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. […]