தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வந்தே விட்டது. இன்று போகி பண்டிகை. ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ சான்றோர் வாக்கு. வீட்டைத் தூய்மை செய்து வெள்ளையடித்து தூசுபோக்கி, மாசு நீங்க வீட்டின் வாசலில் கண்ணுப்பீளையும் வேப்பிலையும் சொருகிவைத்து வரபோகும் தைத்திருநாளை வரவேற்கும் நாள் போகி. பனிக் காலமான மார்கழி மாதம் முடியும் நாளான போகியன்று அருகில் அண்டி இருக்கும் பூச்சிகள், விஷக் கிருமிகள் …