பீஹார் சட்டசபைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில் போது, லகிசரை தொகுதியில் பதற்றம் நிலவியது.. அந்தத் தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் மற்றும் பாஜக வேட்பாளர் விஜய் குமார் சின்ஹா காரின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.. இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு நிலவியது. பாதுகாப்புப் படையினர் விரைந்து வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். வாக்குச் சாவடியில் நடந்த தாக்குதலை “துரதிர்ஷ்டவசமானது” என்று சின்ஹா தெரிவித்தார். […]

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது மறைந்த தாயார் ஹீராபென் மோடியைப் போன்ற கதாபாத்திரங்களைக் காட்டும் வகையில், AI மூலம் உருவாக்கப்பட்ட வீடியோவை பீகார் காங்கிரஸ் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது. யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் பகிரப்பட்ட அந்த வீடியோவில், “சஹாபின் (மதிப்புக்குரியவர்) கனவுகளில் ‘அம்மா’ தோன்றுகிறார். சுவாரஸ்யமான உரையாடலைப் பாருங்கள்” என்று இந்தியில் ஒரு தலைப்பு இருந்தது. மேலும் வீடியோவில், பிரதமர் மோடியைப் போன்ற ஒரு கதாபாத்திரம் […]

மத்திய அரசின் சமீபத்திய ஜிஎஸ்டி விகிதக் குறைப்புகளை காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான பி. சிதம்பரம் வரவேற்றுள்ளார், ஆனால் இந்த நடவடிக்கை “8 ஆண்டுகள் தாமதமானது” என்று விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் தற்போதைய ஜிஎஸ்டி வடிவமைப்பு மற்றும் விகிதங்களை முதலில் அறிமுகப்படுத்தியிருக்கக்கூடாது என்றும், எதிர்க்கட்சிகள் பல ஆண்டுகளாக இந்தப் பிரச்சினைகளுக்கு எதிராக பலமுறை எச்சரித்து வந்தாலும், அவர்களின் வேண்டுகோள்கள் புறக்கணிக்கப்பட்டன என்றும் கூறினார். […]