தொழிலாளர்களுக்கு சிறப்பான ஊதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பை வழங்க தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் வழிவகுக்கின்றன என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஊதிய சட்டத்தொகுப்பு 2019, தொழில் உறவுகள் சட்டத்தொகுப்பு 2020, சமூகப் பாதுகாப்பு சட்டத்தொகுப்பு 2020 தொழில்துறை சார்ந்த பாதுகாப்பு, சுகாதாரம், பணிநிலை சட்டத்தொகுப்பு 2020 ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் தொழிலாளர் சட்டத்தொகுப்புகள் 2025 நவம்பர் 21 முதல் அமலுக்கு வரும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. […]

புதிய தொழிலாளர் சட்டங்களால் தொழிலாளர்களின் நலன்கள், உரிமைகள் பாதிக்காதவாறு மத்திய அரசு சுமுக தீர்வு காண வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தேசத்தின் பொருளாதார, தொழில் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு தொழிலாளர் சட்டங்களை சீர்திருத்துவதற்காக ஏற்கெனவே நடைமுறையில் இருந்த 29 தொழிலாளர் சட்டங்கள் நீக்கப்பட்டு 4 புதிய சட்டங்களை கடந்த 22-ஆம் தேதி முதல் மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.அதன்படி ஊதிய சட்டம் 2019, தொழில் உறவு சட்டம் […]

விதைகள் வரைவு மசோதா 2025 குறித்த கருத்துகளை மத்திய அரசு வரவேற்றுள்ளது. விதைகள் வரைவு மசோதா 2025-ஐ மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை தயாரித்துள்ளது. தற்போதைய விதைகள் சட்டம் 1966 மற்றும் விதைகள் (கட்டுப்பாடு) ஆணை 1983-க்கு மாற்றாக இந்த மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது. விதை மசோதா, 2025 வரைவு, சந்தையில் கிடைக்கும் விதைகள் மற்றும் நடவுப் பொருட்களின் தரத்தை ஒழுங்குபடுத்துதல், விவசாயிகள் […]

4 ஆண்டுகளில் 211 மசோதாக்களில் 170-க்கு ஒப்புதல் வழங்கப்பட்டது என தமிழக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில்: தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க காலதாமதம் செய்வதாகவும், அவரது நடவடிக்கைகள் தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கு எதிரானதாக உள்ளதாகவும், சில ஆதாரமற்ற மற்றும் உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகள் பொதுவெளியில் வைக்கப்பட்டுள்ளன. அக்டோபர் 31, 2025 வரை […]

தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடரில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட நிதி பொறுப்புடைமை சட்டம், எம்எல்ஏக்கள் ஓய்வூதியம் உயர்வு உட்பட 9 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டம் கடந்த அக்.14 முதல் அக்.17ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற்றது. இதில் தனியார் பல்கலைகள், சித்த மருத்துவ பல்கலை. உருவாக்கும் சட்டம் உட்பட 18 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக கடந்த 2022ம் […]

மத்தியப் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், இந்தியப் புள்ளியியல் கழக மசோதா, 2025-ன் வரைவைப் பொதுமக்களின் கருத்துக்கேட்பிற்காக வெளியிட்டுள்ளது. முன்-சட்டமியற்றும் கலந்தாய்வு செயல்முறையின் ஒரு பகுதியாக அனைத்து பங்குதாரர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கருத்துகளும் ஆலோசனைகளும் வழங்கலாம் என தெரிவித்துள்ளது. இந்தியப் புள்ளியியல் கழகம் டிசம்பர் 1931-ல் நிறுவப்பட்டது. அன்று முதல், இது இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்கக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. 2020-ல் டாக்டர் ஆர்.ஏ. […]

“பதிவு மசோதா 2025’ வரைவு குறித்து பரிந்துரைகளை 30 நாட்களுக்குள் பொதுமக்கள் கருத்து தெரிவிக்க வேண்டும் என நில வளத்துறை தெரிவித்துள்ளது ‌. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; மத்திய அரசின் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள நில வளத்துறை, நவீனமிக்க, ஆன்லைன் வழி, காகிதமற்ற மற்றும் குடிமக்களுக்கு உகந்த ‘பதிவு மசோதா 2025’ என்ற வரைவைத் தயாரித்துள்ளது. இது அரசியலமைப்பிற்கு முந்தைய பதிவுச் சட்டம், 1908-க்கு மாற்றாக […]