ராஜஸ்தானின் உதய்பூரில், 55 வயது பெண், 17வது முறையாக குழந்தையை பெற்றெடுத்தது அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ராஜஸ்தானின் உதய்பூரில் வசித்து வருபவர் ரேகா, 55. அவரது கணவர் காவ்ரா கல்பேலியா. ஏழ்மையான குடும்பம். பழைய பொருட்களை சேகரித்து அதை விற்று வரும் பணத்தை கொண்டு காவ்ரா குடும்பத்தை கவனித்து வருகிறார்.ஏற்கனவே 16 குழந்தைகளுக்கு தாயானவர் ரேகா. அதில் நான்கு மகன், ஒரு மகள் என ஐந்து குழந்தைகள் உயிரிழந்துவிட்டன. […]