நாட்டில் சாலை விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றைக் குறைத்து உயிர்களைக் காப்பாற்றும் நோக்கில் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. பில்ட்-ஆபரேட்-டிரான்ஸ்ஃபர் (பிஓடி) மாதிரியின் கீழ் கட்டப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் புதிய விதிகளை அமல்படுத்த உள்ளதாக அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த விதிகளின்படி, நெடுஞ்சாலையின் எந்தவொரு பிரிவிலும் ஒரு வருடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டால், அந்தத் திட்டத்தின் கட்டுமானத்திற்குப் பொறுப்பான ஒப்பந்ததாரர்கள் நேரடியாகப் பொறுப்பாவார்கள். […]