பிரேசிலின் பெர்னாம்புகோவில் நடந்த சாலை விபத்தில் 17 பேர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு பிரேசிலில் பஹியாவில் உள்ள ப்ரூமாடோ நகரத்தில் இருந்து 30 பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, பெர்னாம்புகோ மாநிலத்தில் உள்ள சலோவா என்ற நகரத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிர் திசையில் உள்ள சாலையில் சென்று சாலையோர பாறையில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 17 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

