அரசுப் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; திமுகவின் வாக்குகளைப் பிரிக்கலாம் என்ற எண்ணத்தோடுதான் பல்வேறு புதிய கட்சிகளை, ஒவ்வொரு தேர்தலிலும் பாஜககளத்தில் இறக்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறது. இப்போதும் அந்த தந்திரத்தை பாஜகவினர் கையில் எடுத்து இருக்கிறார்கள். வரும் தேர்தலில் இவற்றை முறியடித்து திமுக வெற்றி பெறும். பாஜகவுடன் இனி கூட்டணி கிடையாது என்று சொன்ன […]
bus fare
மின்சார பேருந்துகளில் டீலக்ஸ் கட்டணமே வசூலிக்கப்படும். இதர பேருந்துகளைப் போல சிங்காரச் சென்னை பயண அட்டை, ரூ.1000 பயண அட்டை, டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பயணச்சீட்டு பெறலாம் என மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் ரூ.208 கோடி மதிப்பில் 120 புதிய தாழ்தள மின்சார பேருந்துகளின் சேவையை முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார். பேருந்துகளை மின்னேற்றம் […]
தமிழகத்தில் உள்ள அரசுப் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படாது என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் தவறான தகவல் பரவி வருகிறது. தனியார் பேருந்து உரிமையாளர்கள், பேருந்துக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இதுகுறித்து மக்கள் கருத்து கேட்டு, அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அந்த […]