பள்ளி மாணவர்கள் கைகளில் வண்ணக் கயிறுகள் அணிவதை தடை செய்தும், மாணவர்களின் வருகை பதிவேடில், அவர்களின் ஜாதி தொடர்பான விபரங்கள் இருக்கக்கூடாது எனவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பின்வருமாறு: * அனைத்து பள்ளி ஆசிரியர்களும் ஊழியர்களும், சமூக பிரச்னைகள், ஜாதி பாகுபாடு, பாலியல் வன்முறை, பாலியல் துன்புறுத்தல், போதைப்பொருள், ராகிங் குறித்து தங்களுக்குள் கலந்தாலோசித்து, பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டுதல் பயிற்சி வழங்க […]