பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோயும், கர்ப்பப்பை வாய் புற்றுநோயும் பிரதானமானதாக இருக்கின்றன. இவற்றுள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை (cervical cancer) ஏற்படுத்தும் Human papillomavirus-க்கு எதிரான தடுப்பூசியை இதுவரை வெளிநாடுகளிலிருந்து பெற்று வந்த நிலையில், கடந்த வருடம் அதன் உற்பத்தியை இந்தியாவிலேயே தொடங்கியிருக்கிறது கோவாக்சின் தடுப்பூசியைத் தயாரித்த சீரம் நிறுவனம். இந்நிலையில் சீரம் நிறுவனத்தால் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான தடுப்பூசி, செர்வாவாக்(HPV), இரண்டு டோஸ் ரூ.2,000-க்கு, […]