fbpx

இந்தியாவின் பணக்கார முதலமைச்சர் பட்டியலில் ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு முதலிடத்தில் உள்ளார். அவரின் சொத்து மதிப்பு ரூ. 931 கோடி சொத்துக்களுடன் முதலிடத்தில் உள்ளார். ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தை சேர்ந்த மம்தா பானர்ஜி வெறும் 15 லட்சத்துடன் ஏழ்மையான முதலமைச்சராக இருக்கிறார்.

மாநில சட்டமன்றங்கள் …

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் இளைய சகோதரரும், முன்னாள் எம்எல்ஏவுமான ராமமூர்த்தி நாயுடு காலமானார். அவருக்கு வயது 72.

ராமமூர்த்தி நாயுடு மாரடைப்பு காரணமாக மூன்று நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்குகள் …

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கும் திட்டம் வரும் அக்டோபர் 31-ம் தேதி தீபாவளி பண்டிகை முதல் அமல்படுத்த ஆந்திர அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் மாநில அமைச்சரவை கூட்டம் அமராவதியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர் நாதள்ள மனோகர் செய்தியாளர்களிடம் …

திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்பட்ட லட்டில் சிகரட் துண்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிக்க கடந்த ஜெகன்மோகன் ஆட்சியில் தரமற்ற நெய் வாங்கியது கண்டறியப்பட்டது. அந்த நெய்யை பரிசோதித்ததில் மாடு, பன்றி கொழுப்புகள், மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலப்படம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதற்கு பல்வேறு மாநிலங்களிலும் பக்தர்கள் கடும் கண்டனமும், …

பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டும் முடிவினை சந்திரபாபு நாயுடு கைவிட வேண்டுமென டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டப்படும் என ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவர்கள் அறிவித்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன. கர்நாடகாவில் உற்பத்தியாகி …

2024 மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாஜக பெரிய துறைகளை நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவிற்கு கொடுக்க மறுத்து வருகிறதாம்.

மத்தியில் பாஜக ஆட்சி அமைக்க என்டிஏவில் உள்ள தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், ஆதரவு தேவை. இது போல லோக் ஜனதா கட்சி, ஷிண்டேவின் சிவசேனா கட்சி …

பாஜக ஆட்சிக்கும், பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கும் இடையே உள்ள, வித்தியாசம் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மக்களவைக்கான 18-வது தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், இந்தியாவில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கூட்டணி ஆட்சி அமையவுள்ளது. அதன்படி, தனிப்பெரும் கட்சியான பாஜக, சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமாரின் …

கடந்த 2014-17ம் ஆண்டு வரையிலான சந்திரபாபு நாயுடுவின் ஆட்சிக் காலத்தில், திறன் மேம்பாட்டு கழகத்தில் ரூ.317 கோடி ஊழல் நடந்ததாக கடந்த நாலரை ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் அப்போதைய ஆந்திர எதிர்க்கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை சிஐடி கூடுதல் டி.ஜி.பி. சஞ்சய் தலைமையிலான …

தற்போதைய நிலைக்கு கிங் மேக்கராக பார்க்கப்படும் சந்திரபாபு நாயுடுவின் ‘உண்மையான’ முகம் என்ன என்பதை பார்ப்போம்.

74 வயதிலும் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக திகழும் சந்திரபாபு நாயுடு, 1970-களில் கல்லூரிப் பருவத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அதுவும் இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தியின் தீவிர ஆதரவாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். காங்கிரஸில் …

டெல்லியில் நடைபெறும் இண்டியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க இன்று (புதன்கிழமை) காலை முதலமைச்சர் முக.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு சென்றார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி 232 இடங்கள் வெற்றி பெற்ற நிலையில், இன்று மாலை 6 மணிக்கு டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே இல்லத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதனை …